தெலுங்கானா மாநில காவல் துறையில் துணை கண்காணிப்பாளராக முகமது சிராஜ் நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அண்மையில் நடந்த முடிந்த ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கானாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு, குரூப் 1 அரசு பணி, ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் சுமார் 600 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்து இருந்தார்.
நீங்கள் நிஜ வாழ்க்கையிலும் சந்தோஷ் சுப்பிரமணியம் தானா? ஜெயம் ரவியின் பதில்!
அதனை நிறைவேற்றிடும் விதமாக தெலுங்கானா மாநில காவல் துறையில், துணை கண்காணிப்பாளராக முகமது சிராஜுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கானா காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் சிராஜ் நேற்று டிஎஸ்பி ஆக பதவியேற்று கொண்டார். காவல்துறை உடையில் சிராஜ் மிடுக்குடன் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.