தமிழ்நாடு

உலக ஆணழகன் கோப்பை வென்று திரும்பிய நாமக்கல் சரவணனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

சரவணனுக்கு வருமான வரி துறை பணி கிடைத்துள்ளது. தமிழ் நாடு அரசு வேலை வாய்ப்புகள் வழங்கினால் இளைஞர்கள் ஆர்வத்துடன் வருவார்கள் என்று அமெச்சூர் ஆண்ழகன் சங்க சேர்மன் தகவல்.

 

மாலத்தீவில் 15வது உலக ஆணழகன் போட்டி நடந்தது. இதில் இந்தியா, கஜகஸ்தான் உள்பட 36 நாடுகளில் இருந்து ஆணழகன்கள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து 34 பேர் கலந்து கொண்டனர். 60 கிலோ எடை பிரிவில் சேலத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் 4வது இடத்தை கைப்பற்றினார். 80 கிலோ எடை பிரிவில் கன்னியாகுமரியை சேர்ந்த ஜிஜோ மரியோ வெள்ளி பதக்கமும் 90 கிலோ எடை பிரிவில் நாமக்கலை சேர்ந்த சரவணன் தங்க பதக்கமும் வென்று உள்ளனர். சாம்பியன் ஆப் சாம்பியன் போட்டியில் நாமக்கலை சேர்ந்த சரவணன் வென்று உலக ஆணழகன் பட்டத்தை 2வது முறையாக கைப்பற்றினார். உலக ஆணழகன் பட்டத்தை வென்ற சரவணன், பதக்கங்களை வென்ற வீரர்கள் மாலத்தீவில் இருந்து கொழும்பு வழியாக் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் தமிழ் நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க சேர்மன் அரசு மற்றும் நிர்வாகிகள் அவா்களை உற்சகமாக வரவேற்றனர். உலக ஆணழகன் கோப்பையை அமெச்சூர் சங்க நிர்வாகிகளிடம் தந்தனர்.

பின்னர் உலக ஆணழகன் பட்டத்தை வென்ற நாமக்கல் இளைஞர் சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- எனக்கு உடலில் அடிப்பட்டு விட்டது. இதனால் உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்க விருப்பம் இல்லாமல் இருந்தேன். ஆனால் போட்டியில் பங்கேற்க வேண்டும் என ஊக்கம் அளித்தனா். எடை பிரிவிலும் சாம்பியன் ஆப் சாம்பியன் பிரிவிலும் தங்கம் வென்றேன். இந்த முறை போட்டி கடுமையாக இருந்தது. கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் வீரர்களுடன் மோதுவது மிகவும் கடினமாக இருந்தது என்றார்.


தமிழ் நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க சேர்மன் அரசு கூறுகையில், மாலத்தீவில் நடந்த போட்டியில் தமிழ் நாடு வீரர்கள் வென்று உள்ளனர். இந்தியாவில் உலக ஆனழகன் போட்டியை 2வது முறையாக சரவணன் வென்று பெருமை சேர்த்து உள்ளார். தமிழ் நாடு அரசு பல்வேறு வகையில் ஊக்கம் அளித்து உள்ளது. தமிழ் நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டில் ஆணழகன் வீரர்களையும் இணைப்பதாக கூறி உள்ளது.

எல்லா விளையாட்டு போட்டிகளில் கஷ்டங்கள் உள்ளன. ஆனால் ஆணழகன் போட்டியில் அதிகமாக கஷ்டம் இருக்கும். உணவு பழக்கங்கள் கடைபிடிக்க வேண்டும். பொருளாதார உதவிகள் கிடைத்தால் தமிழ் நாட்டில் அதிகமானவர்கள் ஆண்ழகன் போட்டிகளில் பங்கேற்க முடியும். தமிழ் நாட்டை சேர்ந்த 2 பேர் உலக ஆண்ழகனாக இருப்பது பெருமை. அரசு உதவிகள் செய்தால் மாவட்டங்களில் உள்ளவர்களும் அதிக ஆர்வத்துடன் வருவார்கள். சரவணனுக்கு வருமான வரி துறையில் பணி கிடைத்து உள்ளது.

தமிழ் நாடு அரசு, அரசாணை வெளியிட்டு உள்ளது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பணியிடங்கள் கிடைக்க கூடிய வகையில் நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும். பஞ்சாப் உள்பட சில மாநிலங்களில் போலீஸ் உள்பட மாநில அரசு பணிகளில் சேர்க்கப்படுகின்றனர். அதுபோல் தமிழ் நாடு அரசும் செய்தால் இளைஞர்கள் ஆர்வத்துடன் வருவார்கள். இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்க விளையாட்டு முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsdesk

Recent Posts

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி

அமரன் படத்தில் இடம் பெற்ற மொபைல் எண்னிற்கு 1 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ்

அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…

நவம்பர் 21, 2024 2:53 மணி

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது – தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…

நவம்பர் 20, 2024 2:28 மணி

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…

நவம்பர் 20, 2024 2:02 மணி

ஒரே நாளில் 12 விமானங்கள் திடீரென ரத்து – பயணிகள் கடும் அவதி

சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…

நவம்பர் 20, 2024 10:17 காலை