12 ஆம் வகுப்பு பொது தேர்வு ரிசல்டானது இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 12ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலும் நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத் தேர்வை, தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் 7, 534 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 7,72,360 மாணவர்களும், 8,190 தனித்தேர்வர்கள் என 7. 80 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு பணிகளை கண்காணிப்பதற்காக 1,135 பறக்கும் படையினரும், தேர்வினை கண்காணிக்கும் பணியில் 43 ஆயிரத்து 200 ஆசிரியர்களும் ஈடுப்பட்டனர். சென்னை மாவட்டத்தில் 591 பள்ளிகளை சேர்ந்த 62, 124 மாணவர்கள் 240 மையங்களில் தேர்வை எழுதினர்.
மார்ச் 22ம் தேதி பொதுத்தேர்வு முடிவடைந்ததை தொடர்ந்து மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுக்காப்பு மையங்களில் விடைத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தொடர்ந்து 86 மையங்களில், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 13ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுமையாக முடிவடைந்து, சரிபார்க்கும் பணிகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் முடிவடைந்தது.
இந்த நிலையில் 12 ஆம் பொது தேர்வு ரிசல்டானது www.dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணைதளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. மாணவர்கள் அனைவரும் தங்களது ரிசல்ட்டை ஆர்வமுடன் சரிபார்த்து வருகின்றனர்.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…