அண்ணா பல்கலைக்கழகத்தின் திருச்சி வளாகத்தில் பயோ டெக்னாலஜி படித்த சென்னையைச் சேர்ந்த மாணவி அமெரிக்க பல்கலைக்கழகத்தில் நான்கு கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையோடு புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள உள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள குலோபல் பல்கலைக்கழகத்தில் 100% உதவித்தொகையுடன் இன்டர்ன்ஷிப்பை முடித்த அவருக்கு அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவ வளாகமான இந்தியனா யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினல் நான்கு கோடி ரூபாய் உதவித்தொகையுடன் பிஎச்டி படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அரசு பொறியியல் கல்லூரியில் படித்து நான்கு ஆண்டுகளில் பல்வேறு நிறுவனப் பயிற்சிகளை மேற்கொண்ட நித்யஸ்ரீ எம். இ முதுநிலை பொறியியல் படிப்பும் , எம்.எஸ். முதுநிலை அறிவியல் படிப்பும் படிக்காமலேயே நேரடியாக PHD படிக்க உள்ளார்.
PHD படிப்பிற்கான அடிப்படை அறிவு பயிற்சியும் இருந்தால் பல பல்கலைக்கழகங்கள் முதுநிலை பொறியியல் படிப்பு இல்லாமலேயே நேரடியாக phd வாய்ப்புகள் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளாா்.
ஆராய்ச்சி படிப்பை முடித்து பெண் பொது சுகாதாரத் துறையில் பணியாற்ற வேண்டும் ,உலக சுகாதார அமைப்புகளில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது தனது லட்சியம் என நித்யஸ்ரீ கூறுகியுள்ளாா்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…