ஒரே நேரத்தில் தி.மு.க.- அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முயன்றதால் வடசென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் சேகர்பாபு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு!
இரு தரப்பினரையும் தேர்தல் நடத்தும் அதிகாரி சமாதானம் செய்த நிலையில், வடசென்னையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் ராயபுரம் மனோ, தி.மு.க. சார்பில் போட்டியிடும் கலாநிதி வீராசாமி ஆகியோர் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, “அ.தி.மு.க. தோல்வி பயத்தில் இவ்வாறு செய்கிறது; முதலில் டோக்கன் வாங்கியது தி.மு.க. வேட்பாளர் தான்; நாங்கள் 2 ஆம் எண் டோக்கன் பெற்றோம்; அ.தி.மு.க. 7 ஆம் எண் டோக்கன் பெற்றது. அ.தி.மு.க.வினர் வேண்டுமென்றே பிரச்சனை செய்கின்றனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
வளர்ப்பு மகளை பாலியல் தொல்லை செய்து கொலை – 2 பேர் கைது
அதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “முதலில் அலுவலகம் சென்றது நாங்கள் தான்; திடீரென தி.மு.க.வினர் உள்ளே நுழைந்து பிரச்சனை செய்தனர். எங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் தி.மு.க.வினர் திபுதிபுவென உள்ளே வந்தனர். அ.தி.மு.க. சார்பில் 5 பேர் தான் சென்றோம்; தி.மு.க.வினர் 8 பேர் உள்ளே வந்தனர். அ.தி.மு.க. தான் முதலில் வந்ததாகக் கூறிய தேர்தல் அலுவலரையும் தி.மு.க.வினர் மிரட்டினர். வேட்பு மனுத்தாக்கலின் போது, தி.மு.க.வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர்” எனத் தெரிவித்தார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…