ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை – அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர்
தற்கொலை செய்துகொண்ட நிலையில், தமிழ்நாடு அரசு விழித்துக் கொண்டு
உச்சநீதிமன்றத்தில் தடை வாங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அரிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, லட்சக்கணக்கில் கடன் வாங்கி பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஓடும் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ள ஐந்தாவது உயிர் ஜெயராமன் ஆவார். ஆன்லைன் ரம்மிக்கு அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பறிபோவதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்து உயிர்கள் பலியாகி வரும் நிலையில், இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீர்வு ஆகும். இதுகுறித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில், உச்சநீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்து வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
வன்முறையை தூண்டுவதே பாஜகவின் இலக்கு
00:45
Video thumbnail
நீதிமன்றத்தையே மிரட்டும் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்
00:30
Video thumbnail
நீதிமன்றத்தை மிரட்டும் ஜகதீப் தன்கர்
00:22
Video thumbnail
யார் இந்த குருமூர்த்தி?
00:46
Video thumbnail
செங்கோட்டையன் அரசியல் வாழ்க்கை காலி
00:40
Video thumbnail
தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கும் பவர் செக்டார்கள்..
00:56
Video thumbnail
யார் இவர்கள்? | நீதிமன்றத்தை மிரட்டும் தன்கர் | கவர்னரின் அடாவடி செயல்களை நியாயப்படுத்தும் பாஜகவினர்
10:43
Video thumbnail
தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கும் பவர் செக்டார்கள்| காணாமல் போன அரசியல் தலைவர்கள்| குருமூர்த்தி யார்
13:55
Video thumbnail
மாநில சுயாட்சி என்பது எங்களின் உரிமை | ஸ்டாலின் எடுத்து வைத்த முதல் அடி | அலறும் ஒன்றிய அரசு
12:54
Video thumbnail
வட மாநிலங்களின் நிலைமை தமிழ்நாட்டில்... | Tamilnadu | DMK | BJP
00:32
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img