அந்தமான் சென்ற விமானம் சென்னை திரும்பி வந்தது
சென்னையில் இருந்து 180 பயணிகளுடன், அந்தமான் புறப்பட்டு சென்ற தனியார் பயணிகள் விமானம், அந்தமானில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, அந்தமானில் தரையிறங்க முடியாமல், 180 பயணிகளுடன் மீண்டும், சென்னைக்கே திரும்பி வந்தது.
இதனால் அந்தமான் செல்ல வேண்டிய 180 பயணிகள், சென்னையில் தவிப்பு.
சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் (ஸ்பை ஜெட்) தனியார் பயணிகள் விமானம் இன்று பகல் ஒரு மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் 180 பயணிகள் ஏறி அமர்ந்து விட்டனர். ஆனால் அந்தமானில், மோசமான வானிலை நிலவியதன் காரணமாக, விமானம் தாமதமாக இன்று பிற்பகல் 2.30 மணி அளவில், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, அந்தமான் புறப்பட்டு சென்றது.
இன்று மாலை 4.30 மணி அளவில், அந்த தனியார் பயணிகள் விமானம், அந்தமான் வான் வெளியை நெருங்கியது. ஆனால் அந்தமானில் மோசமான வானிலை நிலவியது. இந்த நிலையில் விமானத்தை அந்தமானில், தரை இறக்க முடியாமல், நீண்ட நேரம் விமானம் வானில் வட்டமடித்துக் கொண்டு இருந்தது. ஆனால் வானிலை சீரடைய வில்லை.
இதை அடுத்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது விமானத்தை மீண்டும், சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அந்த விமானம், 180 பயணிகளுடன், இன்று இரவு 7 மணிக்கு மீண்டும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து தரை இறங்கியது.
இதை அடுத்து பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக, அந்தமானில் விமானம் தரையிறங்க முடியவில்லை. எனவே விமானம் ரத்து செய்யப்படுகிறது. நாளை விமானம் மீண்டும் அந்தமான் செல்லும். பயணிகள் இதே விமான டிக்கெட்களில் நாளையோ அல்லது பயணிகளுக்கு விருப்பப்பட்ட வேறு ஒரு நாளிலோ, அந்தமானுக்கு பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தனர்.
https://www.mugavari.in/no-action-against-congress-till-elections-are-over/
ஆனால் பயணிகள் பலர், அதை ஏற்றுக் கொள்ளாமல், விமானம் குறித்த நேரத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்று இருந்தால், அந்தமானில் தரையிறங்கி இருக்கும். ஆனால் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றதால் தான், அந்தமானில் தரைக்காற்று வீசத் தொடங்கி, மோசமான வானிலை நிலவியதால் விமானம் தரையிறங்க முடியாமல் திரும்பி வந்துவிட்டது என்று வாக்குவாதம் செய்தனர். பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதியே, விமானம் சென்னையில் இருந்து அந்தமானுக்கு தாமதமாக புறப்பட்டு சென்றது என்று கூறி, பயணிகளை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.
அதன்பின்பு பயணிகள் வேறு வழியின்றி, தங்களுடைய விமான டிக்கெட்டுகளை, வேறு தேதிகளுக்கு மாற்றிக் கொண்டு, சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றனர்.
அந்தமான் செல்ல இருந்த 180 பயணிகள், அந்தமான் வரை விமானத்தில் சென்று விட்டு, அங்கு இறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்த சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…
மராட்டியம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர்…