தமிழ்நாடு

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால் அமைச்சரவை மாற்றம் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் டெல்லியில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதைப் போல் தமிழகத்திலும் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது. எல்லாரும் எதிர்பார்த்த திமுக கூட்டணி 40/40 வெற்றிப் பெற்றது. ஆனால் மத்தியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் முதலமைச்சர் அமெரிக்கா பயணம் செல்கிறார், அதற்கு முன்பு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம், அப்பொழுது இரண்டு மூன்று அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படலாம் என்றும் புதியதாக இரண்டு அமைச்சர்கள் பதவி ஏற்கலாம் என்றும் கூறப்பட்டது. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணமும் தள்ளிப்போனது, அமைச்சரவை மாற்றமும் நடைபெறவில்லை.

தற்போது ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் கொண்டாட்டத்திற்கு பின்னர் ஜூலை 27 ஆம் தேதி முதலமைச்சர் அமெரிக்கா செல்கிறார் என்பது உறுதியாகிவிட்டது.

அதற்கு முன்பு அமைச்சரவை மாற்றம் நடைபெற வாய்ப்பு இருக்கிறதா இல்லையா? உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்குமா கிடைக்காதா என்ற பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். அப்போது உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்த போது, அதற்கான காலம் இன்னும் கனிய வில்லை என்று சூசகமாக கூறினார். அப்படியென்றால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கும் திட்டம் முதலமைச்சரிடம் இல்லை என்பது தெளிவாகி விட்டது.

அமைச்சரவை மாற்றம் நடக்குமா நடக்காதா?

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி இல்லை என்றாலும் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அப்போது

ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாசர், முதல்வர் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதால் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆவடி சா.மு.நாசரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

Newsdesk

Recent Posts

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி

அமரன் படத்தில் இடம் பெற்ற மொபைல் எண்னிற்கு 1 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ்

அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…

நவம்பர் 21, 2024 2:53 மணி

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது – தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…

நவம்பர் 20, 2024 2:28 மணி

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…

நவம்பர் 20, 2024 2:02 மணி

ஒரே நாளில் 12 விமானங்கள் திடீரென ரத்து – பயணிகள் கடும் அவதி

சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…

நவம்பர் 20, 2024 10:17 காலை