சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லதில், “மகாகவி பாரதி களஞ்சியம்” என்னும் நூல் அறிமுக விழா மற்றும் முன்பதிவு தொடக்க விழா நடைபெற்றது, இதில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ் விமலா, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அருள், திரைப்பட இயக்குனர் S.P.முத்துராமன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் சிறப்புரையாற்றிய சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ் விமலா, இந்திய அரசியலைமைப்பு சொல்லும் அடிப்படை உரிமைகள் பாரதியின் பாடல்களில் நிறந்துள்ளன என்றார். பாரதியின் அன்பு, மானுடத்தையும் தாண்டியது என்றும் பசியை ஒழிக்க பாரதி போராடினார் என்றும் அவர் தெரிவித்தார். பாரதியின் கருத்துகள் இப்பொழுது மட்டும் அல்ல, எப்பொழுதுக்கும் தேவைப்படும் என விமலா குறிப்பிட்டார்.
‘பெண் விடுதலை என்றால் மண் விடுதலை’ என, பாரதி அந்த காலத்திலேயே சொன்னதால் மட்டுமே, உலகில் உள்ள பாதி பெண்களாவது வெளி உலகத்துக்கு வந்துள்ளனர் என அவர் கூறினார். “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று பாரதியார் சொன்ன நிலையில், “மடமையைக் கொளுத்தாமல், மாதரையே கொளுத்துவதைத்தான் மகளிர் நீதிமன்றத்தில் பார்த்துக்கொண்டு இருப்பதாகவிமலா, வேதனையை வெளிப்படுத்தினார்.
இவ்விழாவில் வாழ்த்துறை வழங்கிய தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அருள், தமிழ்நாடு முதலமைச்சர், மகா கவியின் நினைவு நாளை (September 11) மகாகவி நாளாக அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார். பாரதியாரின் பணிகளை தொகுத்த அறிஞர்களின் குடும்பதினரை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளதை அவர் எடுத்துரைத்தார்.பாரதியாரின் பணியை யார் செய்தாலும், பாரதியின் எந்த வரியை யார் தொட்டாலும் அவர்கள் வெற்றியே பெறுவார்கள் என அருள் தெரிவித்தார்.
முதலமைச்சரால், வரும் ஜனவரி மாதம் துவக்கி வைக்கப்படவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியில், “மகாகவி பாரதி களஞ்சியம்” நூல் வெளியிடப்படுவதற்கு அருள், மகிழ்ச்சி தெரிவித்தார்.
நள்ளிரவில் ஆம்புலன்ஸ் பெண்ணுக்கு பிரசவம்.. தாய்-சேய் நலமுடன் மருத்துவமனையில் அனுமதி.