பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.விற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வின் போது, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பா.ம.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்களவைத் தேர்தலில் 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டி!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., “தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். 60 ஆண்டுகளாக தமிழகத்தை ஆள்பவர்களை மாற்ற வேண்டும் என மக்கள் எண்ணுகின்றனர். நாட்டின் நலன் கருதி, பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடர பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகத் தேர்வு செய்யப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து பேசிய பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆளும் கட்சிகளுக்கு மாற்றாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. 2026- ஆம் ஆண்டு தமிழக அரசியலில் கண்டிப்பாக மாற்றம் வரும். பா.ம.க.வின் முடிவால் தமிழக அரசியலில் நேற்றிரவில் இருந்து மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவிலும் மூத்த தலைவராக ராமதாஸ் இருப்பார். பா.ம.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது பின்னர் முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
“திருச்சியில் துரை வைகோ போட்டியிடுவார்”- வைகோ எம்.பி. அறிவிப்பு!
கடந்த 1998, 2019- ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…