தமிழ்நாடு

“பா.ஜ.க.வுடன் ராமதாஸ் கூட்டணி வைத்தது ஏன்?”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

 

“பா.ஜ.க.வுடன் ராமதாஸ் கூட்டணி வைத்தது ஏன்?” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

“குடிமராமத்துப் பணிகளை செய்தது அ.தி.மு.க.”- எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

தருமபுரி மாவட்டத்தில் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். பா.ஜ.க. கூட்டணிக்கு ராமதாஸ் ஏன் சென்றார் என்று அவரது கட்சியினருக்கே தெரியும். மக்களின் நலனுக்காகவே பாடுபடும் கூட்டணி இந்தியா கூட்டணி. பழங்குடியின, பட்டியலின மக்களுக்கான பல திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வந்தது.

வன்னியர் இடஒதுக்கீட்டிற்காக தி.மு.க. போராடியது. அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் மாறி மாறி வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக குற்றம் சொல்கின்றனர். எந்த சமூகம் இருந்தாலும், அந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காக பாடுபடும் சமூகநீதி இயக்கம் தி.மு.க. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் உத்தரவாதம் பெற்றாரா ராமதாஸ். சாதிவாரி கணக்கெடுப்பிற்கு பா.ஜ.க. முட்டுக்கட்டை போட்டுள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பம்- பிரதமருடன் உரையாடிய மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்!

மாநில அரசால் சாதிவாரி குறித்து ஆய்வு தான் நடத்த முடியும். கணக்கெடுப்பு நடத்த முடியாது. தாய் வீட்டு சீராக மகளிர் உரிமைத்தொகையை பெண்கள் நினைக்கின்றனர். இந்திய வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் இது. ஜனநாயகம் பாதுகாக்கப்பட, சமத்துவத்தை காக்க பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். சமத்துவத்தை கிலோ என்னவென்று கேட்கும் கட்சி தான் பா.ஜ.க.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

santhosh

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி