சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை கோயம்பேடு அருகே அமைந்துள்ள பிரபலமான வி.ஆர். மாலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் வாயிலாக மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதனையடுத்து அருகே உள்ள திருமங்கலம் போலீசாருக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்களும், இரண்டு மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு வி.ஆர். மால் முழுவதும் தீவிர சோதனை செய்து வருகிறார்கள். மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடைபெறுவதை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அண்ணா நகர், திருமங்கலம், அயனாவரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் அமைந்துள்ள பிரபல மாலில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.
https://www.mugavari.in/news/tamilnadu-news/chennai-109-criminal-arrest/1731
இதுபோன்று தொடர் நிகழ்வு ஏற்படுவதால் சென்னை திருமங்கலம், அயனாவரம், அண்ணா நகர் சுற்றுப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.