எனக்கு நினைவுத் தெரிந்ததில் இருந்து சாதியம்தான் எனக்கான எதிரி என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கவிதாவுக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!
சென்னை தி.நகரில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், “தனி நபரை நான் விமர்சித்தது இல்லை; மோடி என்பவர் பாரத பிரதமர்; அவருக்கான மரியாதை எப்போதும் கிடைக்கும். நான் என் எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன்; எனக்கு நினைவுத் தெரிந்ததில் இருந்து சாதியம்தான் எனக்கான எதிரி. யார் விலங்கிடப்பட்டிருக்கிறர்கள் எனத் தெரிய வேண்டுமெனில் சாதிய கணக்கெடுப்பு அவசியம்.
காய்கறி வாங்கி ஆதரவுத் திரட்டிய நடிகர் மன்சூர் அலிகான்!
தி.மு.க.வை விமர்சித்து ரிமோட்டை தூக்கிப்போட்டு டிவியை உடைத்துவிட்டு, இப்போது கூட்டணியா எனக் கேட்கிறார்கள்; டிவிக்கான கரண்ட், ரிமோட்டுக்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள் தான் நமக்கு முக்கியம். நமது டிவி, நமது ரிமோட்; அது இங்குதான் இருக்கும்; எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.