சென்னை தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
பாஜகவின் செல்வாக்கு சரிகிறது! அமலாக்கத்துறைக்கு நன்றி சொல்லும் இண்டியா கூட்டணி!
சென்னை ஆழ்வார்பேட்டை செயின் மேரிஸ் சாலையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் ஏராளமானோர் இருந்தனர். அப்போது முதல் தளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் 3 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலையில், தீயணைப்பு வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் விடுதியின் ஊழியர்களான மணிப்பூரைச் சேர்ந்த லல்லி என்ற திருநங்கை, மேக்ஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ராஜ் என்பது தெரிய வந்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னை மாநகர கூடுதல் ஆணையர், கிழக்கு காவல் இணை ஆணையர் ஆகியோர் விபத்து பகுதியில் ஆய்வு செய்தனர். மெட்ரோ பணிகளால் விபத்து நடந்திருக்கலாமா என செய்திகள் வெளியான நிலையில், விபத்து நடந்த பகுதியில் மெட்ரோ அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.
“இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஜெயலலிதா”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!
அதைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், கேளிக்கை விடுதி அமைந்துள்ள பகுதியில் இருந்து 340 அடிகள் தொலைவில் பணிகள் நடைபெற்றதாகவும், விபத்திற்கு மெட்ரோ பணிகள் காரணம் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.