மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவைத்தொகுதி மறுசீரமைப்பு செய்ய முற்படும் மத்திய அரசின் முயற்சிக்கு தென் மாநிலங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக திமுக, தொகுதி மறுசீரமைப்புக்கு வலுவான எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தையும் நடத்தியது. இந்தன் கூட்டத்தின் முடிவில் , தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, நாளை சென்னையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பு குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் , “நாடாளுமன்ற மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தற்போது பேசு பொருளாகி இருக்கிறது. இதனை திமுக தான் பேசுபொருளாக்கியது. திமுக ஏன் நாடாளுமன்ற மக்களவை தொகுதி பங்கீடு விஷயத்தில் இவ்வுளவு போராடுகிறது என்றால், தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் இருந்தால், நமது எம்.பி எண்ணிக்கை பாதிக்கப்படும்.
இது நமது மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை. அதனாலேயே தமிழ்நாட்டில் மாநில அளவிலான அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. பாஜக தவிர பிற அனைத்து கட்சியும் ஓரணியில் நின்று நியாயமான தொகுதி மறுசீரமைப்பு கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பு காரணமாக பாதிக்கப்படும் பிற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டுமென முடிவெடுத்தோம். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப் மாநில முதல்வர்களுக்கும், நாடாளுமன்றத்தில் பிற கட்சிகளுக்கும் கடிதம் எழுதினேன்.
சிலரிடம் நானே நேரடியாக தொலைபேசியில் பேசினேன். அவர்களை மாநில அமைச்சர், எம்.பி தலைமையிலான குழு சந்தித்து விவரித்து நான் எழுதிய கடிதத்தை வழங்கினர். சிலர் நேரில் வருவதாகவும், சிலர் பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதாக கூறி இருக்கிறது. முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது.
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, தமிழ்நாடு நாம் அழைத்து இருக்கும் பிற மாநிலங்கள் பாதிக்கப்பட்டால், இந்தியாவில் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது. ஜனநாயகத்திற்கான மதிப்பே இருக்காது. நாடாளுமன்றத்தில் நமது குரல் நசுக்கப்படும். உரிமைகள் நிலைநாட்ட முடியாது. இது மாநிலத்தை அவமதிக்கும் செயல். எனவே, மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, ஒன்றிய அரசுக்கு சிறப்பாக செயல்பட்டு ஊக்குவித்த மாநிலங்களுக்கு, மத்திய அரசு தண்டனை கொடுக்க கூடாது. தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பான்கை கட்சிகளோட ஒருங்கிணைப்படி இந்த கூட்டம் நடைபெற உள்ளது. அதனாலேயே பிற மாநிலங்களை ஒருங்கிணைக்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நமது முன்னெடுப்பு இந்தியாவை காக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…