தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், தி.மு.க.வின் இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி, உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல் 15) மாலை காலமானார். அவருக்கு வயது 74. இந்நிலையில் அவருடைய மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், கழக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி அவர்கள் மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி அவர்கள் தமிழ்நாட்டு அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு கழகத்திற்கும் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும். புலவர் இந்திரகுமாரி அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கழக உடன்பிறப்புகள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

Raj

Recent Posts

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி

அமரன் படத்தில் இடம் பெற்ற மொபைல் எண்னிற்கு 1 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ்

அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…

நவம்பர் 21, 2024 2:53 மணி

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது – தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…

நவம்பர் 20, 2024 2:28 மணி

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…

நவம்பர் 20, 2024 2:02 மணி

ஒரே நாளில் 12 விமானங்கள் திடீரென ரத்து – பயணிகள் கடும் அவதி

சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…

நவம்பர் 20, 2024 10:17 காலை