அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் புகார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மைக்ரேஷன் சர்டிபிகேட் வாங்குவதற்காக வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த கிருபாநிதி என்பவர் கொண்டு வந்த சான்றிதழ் போலியானதாக இருந்தது தொடர்ந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக உயர்கல்வியில் சேர்வதற்கோ, வேலைவாய்ப்பில் சேர்வதற்கோ அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் படித்த மாணவர்கள் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சான்றிதழின் உண்மை தன்மையை அறிய www.gverify.annauniv.edu என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பிப்பார்கள்.
அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை பல்கலைக்கழக ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து அதன் உண்மை தன்மையை இணையதளத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அலுவலகம் பதிவேற்றம் செய்யும்.
ஆனால் நேற்று நேரடியாக ஒரு நபர் போலி சான்றிதழை கொண்டு வந்ததால் உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் போலி சான்றிதழ் கொண்டு வந்த நபர், போலி சான்றிதழ் பெற்றது எப்படி, யார் மூலமாக கிடைத்தது போலிச் சான்றிதழுடன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஏற்கனவே யாராவது வந்திருக்கின்றார்களா என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்த காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் அடுத்த கட்ட விசாரணை தகவல்கள் வரும் பட்சத்தில் தேவைப்படும் கூடுதல் தகவல்களை அளிப்பதற்கும் பல்கலைக்கழகம் தயாராக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…