தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், 7 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
“கூட்டணியை நம்பி அ.தி.மு.க. இல்லை”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
அதில், திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதியில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் கோபிநாத், கரூர் மக்களவைத் தொகுதியில் ஜோதிமணி, கடலூர் மக்களவைத் தொகுதியில் விஷ்ணு பிரசாத், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் கார்த்தி சிதம்பரம், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மாணிக்கம் தாக்கூர், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர்- குடியரசுத் தலைவர் நிராகரிப்பு!
நெல்லை, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கு காங்கிரஸ் தலைமை இன்று (மார்ச் 24) வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.