திருவள்ளூர் அருகே அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் நெஞ்சு வலி ஏற்பட்டு வகுப்பறையிலே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவர் இன்றைய தினம் வழக்கமாக பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் கற்பித்த பின்னர் மதிய உணவு இடைவேளையின் போது உணவு அருந்த வகுப்பறையிலே அமர்ந்து உணவு அருந்த முயற்சித்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி வகுப்பறையில் விழுந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து சக ஆசிரியர் தகவல் அடிப்படையில் ஊர் பொதுமக்கள் அவரை திருவள்ளுர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வர வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக கூறி உள்ளனர்
அதைத் தொடர்ந்து அவருடைய உடல் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே நெஞ்சு வலி ஏற்பட்டு வகுப்பறையிலே ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…