மத்திய சென்னை தொகுதி மேம்பாட்டு நிதியை 95% மேல் பயன்படுத்தியுள்ளதாக தயாநிதி மாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் நான் மேற்கொண்ட திட்டங்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 1. துறைமுகம் சட்டமன்ற தொகுதி, மண்டலம் 5, 59 வது வட்டம், வ.உ.சி நகரில் பொதுக் கழிப்பிட கட்டிடம். 2. துறைமுகம் சட்டமன்ற தொகுதி, மண்டலம் – 5, 58 வது வட்டம், தாயார் சாஹிப் தெருவில் உள்ள அரசு முஸ்லீம் பள்ளியில் 6 புதிய வகுப்பறைகள் கட்டிடம். 3. ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி, மண்டலம் 9, 112வது வட்டம் டிரஸ்ட்புரம் முதல் மெயின்ரோடு பகுதியில், விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணி (பார்வையாளர் கேலரி, சுற்றுச் சுவர், புதிய நடைபாதை உள்ளிட்ட பல்வேறு பணிகள்). 4. துறைமுகம் சட்டமன்ற தொகுதி, மண்டலம் – 5, 60வது வட்டத்தில் உள்ள ராஜாஜி சாலை கந்தப்ப செட்டி தெருவில் பொதுக் கழிப்பிட கட்டிடம். 5. துறைமுகம் சட்டமன்ற தொகுதி, மண்டலம் 5, 55வது வட்டம், அம்மா உணவகம் பின்புறத்தில் உள்ள நாட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் புதிய அங்கன்வாடி கட்டிடம். 6. துறைமுகம் சட்டமன்ற தொகுதி, மண்டலம் -5, 59வது வார்டு குறளகம் அருகில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையில் புதிய பல்நோக்கு கட்டிடம்.
7. துறைமுகம் சட்டமன்ற தொகுதி, மண்டலம் 5, 55வது வட்டம், செயிண்ட் சேவியர் தெருவில் புதிய அங்கன்வாடி கட்டிடம்.8. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி, மண்டலம் – 5, 62வது வட்டம், கபாலமூர்த்தி சாலையில் உள்ள மே தின பூங்கா விளையாட்டுத் திடலில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி. 9. ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி, மண்டலம் 9, 109வது வட்டம், நுங்கம்பாக்கம் சாலை, லயோலா கல்லூரி சுரங்கப்பாதையை இணைக்கும் புதிய சேவை பாலம் மற்றும் மின் விளக்குகள் அமைக்கும் பணி. 10. அண்ணா நகர் சட்டமன்ற தொகுதி, அரசு புறநகர் மருத்துவமனைக்கு நவீன மருத்துவ 2 (Providing of C Arm, Anaesthesia work station, ultrasonagram medical equipments) 11. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி, இராயப்பேட்டை பல் மருத்துவமனைக்கு (Providing OPG- Orthopantomogram, RVG, X ray unit wall mounted, Dental Chairs with IO Camera and Dental working Stools.)
12. துறைமுகம் தொகுதி, மண்டலம் 5, 55வது வட்டம், அப்பு மேஸ்திரி தெருவில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுதல். 13. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி, மண்டலம் 9, 114வது வட்டம், அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சாலையில் பயணிகள் நிழற்குடை அமைத்தல். 14. மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய வாகனம். 15. அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி, மண்டலம் 8, 100 வது வட்டம், கும்மாளம்மன் கோவில் தெருவில் உள்ள சமூக நலக் கூடத்தில் சமையல் அறை மற்றும் சேமிப்பு அறை கட்டும் பணி. 16. துறைமுகம் சட்டமன்ற தொகுதி, மண்டலம் – 5, 60வது வட்டம், அன்னை சத்யா நகரில் பல்நோக்கு மைய கட்டிடம் கட்டும் பணி 17. ஆயிரம் விளக்கு தொகுதி, மண்டலம் -9, 112 வது வட்டம், வெள்ளாளர் தெருவில், சமூக நலக்கூடம் கட்டும் பணி.18. ஆயிரம் விளக்கு தொகுதி, மண்டலம் 9, 110வது வட்டம், நுங்கம்பாக்கம் லேக் ஏரியா 4வது தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர் இருக்கைகள், உள்விளையாட்டு அரங்கம், கூடைப் பந்து மைதானம் அமைக்கும் பணி 19. ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி, மண்டலம் – 9, 113வது வட்டம், வீராசாமி தெருவில், சுகாதார நிலையம் கட்டும் பணி.
20. அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி மண்டலம் 8, 106வது வட்டம், என்.ஜி.ஓ காலை, 2வது தெருவில், புதிய அங்கன்வாடி கட்டிடம். 21. வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, மண்டலம் -8, 95வது வட்டம், திருநகர் 20வது தெருவில், இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி. 22. துறைமுகம் சட்டமன்ற தொகுதி, மண்டலம் – 5, 57வது வட்டம், வால்டாக்ஸ் சாலை, எண்.244 & 246 இல் புதிய சமூக நலக்கூடம். 23. ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி மண்டலம் – 9, 110வது வட்டம், நுங்கம்பாக்கம், குளக்கரை சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில், உள்விளையாட்டு அரங்கம், கூடைப்பந்து மைதானம் மற்றும் பார்வையாளர் இருக்கைகள் அமைக்கும் பணி, 24. வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, மண்டலம் – 8, 97வது வட்டம், ஆதி ஆந்திர நகர், வெள்ளாளர் தெருவில், உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்குதல்.
25. வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, 8வது மண்டலத்திற்கு, 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஜெட் ரோடிங் இயந்திரம் (Jed Rodding Machine) 26. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி, மண்டலம் – 5, 63வது வட்டத்திற்குட்பட்ட ஆதித்தனார் சாலை, மாநகராட்சி பல் மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் .27. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி, மண்டலம் – 5, 63வது வட்டத்திற்குட்பட்ட ஆதித்தனார் சாலை, மாநகராட்சி பல் மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் (3). 28. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி, மண்டலம் – 5, 63வது வட்டத்திற்குட்பட்ட ஆதித்தனார் சாலை, மாநகராட்சி பல் மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் (5). 29. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி, மண்டலம் – 5, 63வது வட்டத்திற்குட்பட்ட ஆதித்தனார் சாலை, மாநகராட்சி பல் மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் ஆகிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.