தமிழ்நாடு

அழியும் காலத்தில் ஆணவம் தலைவிரித்தாடும்…பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் திமுக

 

பொதிகை தொலைக்காட்சியின் இலச்சினை காவி நிறத்தில் மாற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், வினாச காலே விபரீத புத்தி என வடமொழியில் கூட கூறுவார்கள். அதைத்தான் நாம் அழியும் காலத்தில் ஆணவம் தலைவிரித்தாடும் என்கிறோம். ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே உணவு என்றெல்லாம் இந்திய துணைக்கண்டத்தில் தங்களுடைய கருத்தைத் திணிப்பதில் வக்கிர புத்தியோடு செயல்படுபவர்கள் பாஜக-வினர். அவர்களுடைய எண்ணமும், செயலும் தமிழ்ச் சமுதாயத்திற்கும், தமிழர்களுக்கும் மட்டுமல்ல, ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்குமே அழிவைத் தருவதாகும். ஒற்றுமை, சமத்துவம், கூட்டாட்சித் தத்துவம், சுயமரியாதை, ஜனநாயகம், அரசியல் அமைப்புச் சட்டம் இவைகளுக்கெல்லாம் எதிரானவர்கள் பாஜக-வினர் என இந்தத் தேர்தல் பிரச்சார காலங்களில் அதிகமாகவே அவர்களுக்கு உணர்த்தினோம். ஆனாலும், அவர்கள் உணர்வதாகத் தெரியவில்லை. உணரமாட்டார்கள். உன்மத்தம் பிடித்தவர்கள்
அவர்கள். இதன் வெளிப்பாடுதான் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என உலக மாந்தர்கள் அனைவரும் சமம் என அறம் பாடிய அய்யன் திருவள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசியுள்ளார்கள்.

இதைப் பலமுறை நாம் தடுத்தும் கூட தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கரையை அடித்திருக்கிறார்கள். மீண்டும், மீண்டும் இதைச் செய்கிறார்கள் என்றால், இது ஆணவம் தானே. இந்த ஆணவம் ஜீன் 4-ஆம் தேதி அழிந்தார்கள் என்பதை புலப்படுத்தும். இதைத்தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் அவர்கள் இன்று (21.04.2024) X-டிவிட்டரில் இதை பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள் உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்; வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்; தற்போது #Doordarshan இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள் ! தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Raj

Recent Posts

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி

அமரன் படத்தில் இடம் பெற்ற மொபைல் எண்னிற்கு 1 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ்

அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…

நவம்பர் 21, 2024 2:53 மணி

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது – தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…

நவம்பர் 20, 2024 2:28 மணி

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…

நவம்பர் 20, 2024 2:02 மணி

ஒரே நாளில் 12 விமானங்கள் திடீரென ரத்து – பயணிகள் கடும் அவதி

சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…

நவம்பர் 20, 2024 10:17 காலை