பத்திரிக்கைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்ய வேண்டும் – ஈபிஎஸ் வலியுறுத்தல்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்ய வேண்டும் என திமுக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், விடியா திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் @SavukkuMedia ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் விடியா அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம். ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக்கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் திரு. @mkstalin அவர்கள் திளைத்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.

"இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஜெயலலிதா"- எடப்பாடி பழனிசாமி பேச்சு!

அதனையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம். சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்யுமாறு விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
வக்ஃப் சட்டம் திருத்தம் - தொடர்ந்து எதிர்க்கும் ஸ்டாலின் - நல்ல தலைவருக்கு ஏங்கும் வடமாநில மக்கள்
10:50
Video thumbnail
பாஜக வளர்ச்சி அடைத்திருக்கிறதா?
00:43
Video thumbnail
சங்கி என்றால் சக தோழன்
00:34
Video thumbnail
2026 தேர்தல் களம் | அதிமுக, பாஜக, பாமக கூட்டணி உறுதி
00:26
Video thumbnail
திமுக - விசிக கூட்டணி விரிசல்
00:35
Video thumbnail
RSS திட்டம் | தவெக, விசிக, அதிமுக கூட்டணி
00:44
Video thumbnail
RSS நினைக்கும் கட்சியில்.. நாம் தமிழர் கட்சியின் நிலைமை
00:35
Video thumbnail
கடந்த 11 வருடங்களில், பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது
00:45
Video thumbnail
மகாத்மா காந்தியின் படுகொலையை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கிவிட்டார்கள் - சோனியா காந்தி
00:51
Video thumbnail
இந்திய கல்விக் கொள்கை வேட்டையாடப்படுகிறது - சோனியா காந்தி #soniagandhi #neweducationpolicy #nep
00:52
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img