விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு இருளில் மூழ்கியதே மிச்சம் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

திமுகவின் மூன்றாண்டு ஆட்சியில் தமிழ்நாடு இருளில் மூழ்கியதே மிச்சம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்கு வந்ததும்…. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்- நான்காவது முறையாக நீட் தேர்வு நடந்து முடிந்தாயிற்று! சட்டம் ஒழுங்கைக் காப்பேன் என்றார்- கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் என சந்திசிரிக்கிறது! போதையற்ற தமிழ்நாடு அமைப்பேன் என்றார்- போதைப்பொருள் மாபியா நடத்திவந்ததே அவர் கட்சிக்காரர் ஜாபர் சாதிக் தான் என்று தெரியவந்தது! சமத்துவம் சமூகநீதி காப்போம் என்றார்- வேங்கைவயல் முதல் நாங்குநேரி வரை சாதியத் தீண்டாமை சம்பவங்கள் தலைகுனிவை ஏற்படுத்தின.

 

மாநில உரிமைகள் காக்கப்படும் என்றார்- காவிரி-மேகதாது விவகாரங்களில் மாநில உரிமையை தேர்தல் கூட்டணிக்காக கள்ள மவுனம் சாதித்து தாரைவார்த்தார். வாக்குறுதிகள் நிறைவேற்றுவோம் என்றார்- தேர்தல் அறிக்கையை காற்றில் பறக்கவிட்டு, 99% நிறைவேற்றிவிட்டதாக வாய் கூசாமல் பச்சைப்பொய் பேசினார்! திரு. @mkstalin அவர்களே- விடியல் தரப்போகிறேன் என்றீர்கள்- உங்கள் மூன்றாண்டு ஆட்சியில், அதாவது விடியா ஆட்சியில், தமிழ்நாடு இருளில் மூழ்கியதே மிச்சம் என குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
கல்வியை நம்மிடமிருந்து தொடர்ந்து பறிக்கும் முயற்சி
00:42
Video thumbnail
நமக்கு கல்வி ஏன் அவசியம்?
00:54
Video thumbnail
நீட் தேர்வு மூலம் ஏற்பட்ட பாதிப்பு
00:48
Video thumbnail
2000 வருஷமா கல்வி ஏன் மறுக்கப்பட்டது? நமக்கு கல்வி ஏன் அவசியம்? நீட் தேர்வு மூலம் ஏற்பட்ட பாதிப்பு
13:24
Video thumbnail
இஸ்லாமியர்களின் சொத்துக்களை பறிக்கும் நோக்கத்தில் ஒன்றிய அரசு
00:38
Video thumbnail
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்தியாவாக மாறிக் கொண்டிருக்கிறது
00:57
Video thumbnail
வக்ஃப் சட்டம் திருத்தம் - தொடர்ந்து எதிர்க்கும் ஸ்டாலின்
00:34
Video thumbnail
வக்ஃப் சட்டம் திருத்தம் | தொடர்ந்து எதிர்க்கும் ஸ்டாலின் | நல்ல தலைவருக்கு ஏங்கும் வடமாநில மக்கள்
10:50
Video thumbnail
பாஜக வளர்ச்சி அடைத்திருக்கிறதா?
00:43
Video thumbnail
சங்கி என்றால் சக தோழன்
00:34
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img