கச்சத்தீவு குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை என கிருஷ்ணகிரியில் அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, கழக வெற்றி வேட்பாளர் திரு. V ஜெயபிரகாஷ் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தேன் எனது தலைமையிலான அம்மா அரசால் வகுக்கப்பட்ட மின்சார வாகனக் கொள்கையால் இந்த தொகுதியில் உள்ள ஓசூரில் @AtherEnergy நிறுவனமும் போச்சம்பள்ளியில் @OlaElectric நிறுவனமும் வந்தன. 1974ல் மத்தியிலே காங்கிரசும், மாநிலத்தில் திமுகவும் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தன. அதனை தடுக்க போராடியவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார்கள். பத்தாண்டு காலமாக இதனை கிடப்பில் போட்டுவிட்டு, மாண்புமிகு அம்மா அவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், தற்போது தேர்தலில் வாக்குகள் பெறும் அரசியல் ஆதாயத்திற்காக பேசுகிறார்கள். நம்முடைய மீனவர்கள் இலங்கை அரசால் கைதுசெய்யப்படுவது குறித்து நன்கு அறிந்தும் கச்சத்தீவு குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. கச்சத்தீவுக்காக உண்மையிலேயே போராடிய ஒரே கட்சி @AIADMKOfficial இதைப்பற்றி பேச வேறு எந்த கட்சிக்கும் தகுதியில்லை. எனத் தெரிவித்துள்ளார்.