தமிழ்நாடு

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஈபிஎஸ்!

 

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், கும்பகோணத்தில் இளைஞர்கள் கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாகவும், சென்னை கண்ணகி நகர் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவலர்கள் இருவரை போதை ஆசாமிகள் இருவர் தாக்கியதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவல்துறையினருக்குமே பாதுகாப்பற்ற நிலையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிற்கான முக்கிய காரணமாக போதைப்பொருள் புழக்கம் அமைந்துள்ளது.

 

நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மளிகைப் பொருட்களைப் போன்று மிகச் சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைப்பதாக பத்திரிக்கையாளர்களும் பொதுமக்களும் என்னிடத்தில் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே இந்த போதைப்பொருட்கள் புழங்குவது மிகுந்த கவலையளிப்பதும் கண்டணத்துக்கு உரியதாகும்,சீர்கெட்டு போயிருக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

Raj

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி