தேனி மாவட்டம், சின்னமனூரில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு அடி உதை
சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த செவ்வத்தி வீரன் கூலி வேலை செய்து வருகிறார். அவரது வீடு காலை முதலே திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூவரும் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, தகவலறிந்து வந்த சின்னமனூர் காவல்துறையினர், மூன்று பேரிடம் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் மூன்று பேரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்பு!
தற்கொலைக்கான காரணம் குறித்து சின்னமனூர் கவால்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சின்னமனூர் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.