மக்களவை தேர்தலையொட்டி கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தனது வாக்கினை செலுத்தினார்.
மக்களவை தேர்தலானது (2024) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவானது மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1,58,568 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது
இந்நிலையில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், பாஜக சார்பில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும், நாதக சார்பில் கலாமணி ஜெகநாதனும் போட்டியிடுகின்றனர், இந்த நிலையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அதிகாலையிலையே கோவையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்குப்பதிவினை செலுத்தினார்.