தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் கண்டுள்ளதால் தங்க நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.52,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,430க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு சவரன் ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.51,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.52,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்ந்ததை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.84 -க்கும், கிலோவுக்கு ரூ.2000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.84,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://www.mugavari.in/sasikala-statement/
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரும் நாட்களில் மேலும் உயரக்கூடும் என்று தங்க நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…