குற்ற நடவடிக்கைகள், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல்கள் அடிப்படையில் மட்டும் அரசு செலவில் பாதுகாப்பு வழங்குவது என்பது ஒழுக்க நெறிமுறைக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ராஜ்குமார் என்பவர் கொலை வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, பாதுகாப்பை அரசு திரும்பப் பெற்றது. இதனால் தனக்கு அரசு செலவில் பாதுகாப்பு வழங்கக் கோரி ஸ்டாலின் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ராஜ்குமார் கொலை வழக்கு மட்டுமல்லாமல் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாலும், சரித்திர பதிவேடு குற்றவாளியான அவர் குண்டர் சட்டத்திலும் சிறையிலடைக்கப்பட்டதால் அவருக்கு பாதுகாப்பு வழங்க மறுத்ததாக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்கள் பிரச்னைகளுக்காக பலர் உயிரிழந்துள்ளனர். ஊழல், சமூக விரோத செயல்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்… மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அரசு ஊழியர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலைகளில் அச்சுறுத்தல்களின் அடிப்படையில் அரசு செலவில் பாதுகாப்பு வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் குற்ற நடவடிக்கைகள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு, அச்சுறுத்தல்களின் அடிப்படையில் மட்டும் அரசு செலவில் பாதுகாப்பு வழங்குவது என்பது ஒழுக்க நெறிமுறைக்கு எதிரானது எனத் தெரிவித்த நீதிபதிகள், ஸ்டாலின் பாரதியின் கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…