தமிழ்நாடு

பள்ளிகளில் பாஜகவின் திட்டங்களை போட்டியாக நடத்தும் விவகாரம் மத்திய அரசுக்கு, கே.பாலகிருஷ்ணன் கண்டனம்.

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் பாஜகவின் திட்டங்களை போட்டியாக நடத்தும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளாா்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் – வரும் அக்டோபர் 7 – 11 வரையிலான காலகட்டத்தில் ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்‌ஷ்த் பாரத் போன்ற பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் உள்ளத்தில் பாஜக/ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் இந்த முயற்சியை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள பாலகிருஷ்ணன், மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தர மறுக்கும் இதே பாஜக, தன்னுடைய ஆபத்தான கொள்கைத் திட்டங்களை கொண்டு செல்ல பள்ளிகளை பயன்படுத்துவது மிக ஆபத்தான மாணவர் விரோத போக்காகும் என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இந்த முடிவை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பாலகிருஷ்ணன், இதுபோன்ற தலையீடுகளை மாநில அரசு முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், ஆசிரியர், மாணவர்களும் இதுபோன்ற முயற்சிகளை எதிர்க்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Newsdesk

Recent Posts

ஜெயிலர் 2’ படத்தில் தனுஷ்…. உண்மையா? வதந்தியா?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நெல்சனுக்கும், ரஜினிக்கும் இந்தப்…

அக்டோபர் 22, 2024 5:48 மணி

‘பார்க்கிங்’ பட இயக்குனரிடம் கதை கேட்ட சிவகார்த்திகேயன்…. அடுத்த படம் ரெடி!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்…

அக்டோபர் 22, 2024 5:20 மணி

பகையாளியை பங்காளியாக்கிய இந்தியா- முதன் முறையாக முன் வந்த சீனா..!

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தை சீனா உறுதி செய்துள்ளது. சமீபத்திய ஒப்பந்தம்…

அக்டோபர் 22, 2024 4:18 மணி

ஆலோசகர் இல்லாமல் தடுமாறும் தலைவா் விஜய் – தவெக முதல் அரசியல் மாநாடு பரபரப்பு தகவல்

தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில்…

அக்டோபர் 21, 2024 5:46 மணி

விமல், யோகி பாபு கூட்டணியின் புதிய படத்தின் – படப்பிடிப்பு நிறைவடைந்தது.

விமல் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் விமல் தமிழ்…

அக்டோபர் 21, 2024 3:19 மணி

சிதையும் சீனாவின் பொருளாதாரம் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழில்களையும், பெரும் முதலீடுகளையும் சீனாவில்தான் பெரும் அளவில் வைத்திருந்தனர். சீனாவில் முதலீடு செய்வதும்…

அக்டோபர் 21, 2024 2:23 மணி