நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்.பி நேற்று ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நின்று வெற்றி பெற்ற கனிமொழி தற்போது அதே தொகுதியில் வேட்பாளராக களம் காண்கிறார்.
நேற்று திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செய்துங்கநல்லூர், கொங்கராயகுறிச்சி பாலம் மற்றும் கருங்குளம் பகுதிகளில் மக்களைச் சந்தித்து, வரும் மக்களவைத் தேர்தலில் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்திடுமாறு கேட்டுக்கொண்டேன். நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க உறுதிகொள்வோம். INDIA கூட்டணியை வெற்றி பெறச்செய்வோம். இதே போல் நம் தி.மு.கழக அரசின் நல்லாட்சிக்குச் சான்றாக வெள்ளமடம், செம்பூர், ஆழ்வார்திருநகரி மற்றும் கேம்பலாபாத் பகுதிகளில் கூடியிருந்த மக்கள் திரள், தூத்துக்குடி தொகுதியில் நமது வெற்றியை உறுதிசெய்கிறது. INDIA-வின் ஜனநாயகம் வெல்லும்! பாசிசம் வீழும்!
அடுத்ததாக தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் நம் தி.மு.கழகத்தின் வேட்பாளராக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் என்னை, மக்கள் பணியாற்ற மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டுமெனக் கூறி, பழனியப்பபுரம், கட்டாரிமங்கலம் மற்றும் சின்னமாடன் குடியிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன்.