நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்.பி நேற்று எட்டயபுரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நின்று வெற்றி பெற்ற கனிமொழி தற்போது அதே தொகுதியில் வேட்பாளராக களம் காண்கிறார்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி நேற்று நம் தூத்துக்குடியின் உரிமைக்குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்திட, மீண்டும் எனக்கொரு வாய்ப்பளித்திட வேண்டி, மாதா நகர் சந்திப்பு, எட்டயபுரம் சாலை ஹௌசிங் போர்டு, தாளமுத்துநகர் புனித ஜெபமாலை ஆலயம் மற்றும் அன்னை இந்திரா நகர் பகுதிகளில் மக்களிடம் வாக்கு சேகரித்தோம். நாட்டைக் காக்க நாற்பதையும் வென்றிடுவோம். ஜனநாயகம் காத்திடுவோம்.