காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கடிதம் வழங்கினார். நடிகர் மன்சூர் அலிகான்.
காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பி நடிகர் மன்சூர் அலிகான் அதற்கான கடிதத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது, பிரதமரை கைது செய்து சிறையில் அடைத்த பிறகு தான் தேர்தல் நடத்த வேண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான கடிதம் கொடுத்துள்ளேன். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். மீண்டும் தாய் கட்சியில் இணையுள்ளேன். இதன் மூலம் தனது இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரஸ் உடன் இணைத்து அதன் உறுப்பினர்கள் அனைவரையும் காங்கிரஸ் கட்சியில் இணைக்க முடிவு எடுத்துள்ளேன்.
மேலும் பேசிய அவர் பிரதமர் பொறுப்பில் இருக்கும் மோடி விஷ பாம்பு விட அதிகமாக இஸ்லாமியர்கள் மீது விஷம் கக்குகிறார். மதகலவரத்தை உண்டு பண்ணி மணிப்பூரில் செய்ததை போலவும் , குஜராத்தில் செய்ததை போலவும் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கால் தூசி கூட மோடி ஈடாக மாட்டார். மத கலவரத்தை தூண்ட நினைத்த மோடியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை கூறியதாவது தேர்தல் நேரம் என்பதனால் காங்கிரஸ் கட்சியில் இணைய முடியாத காரணத்தினால் தேர்தல் முடிவுக்கு பின்னர் மன்சூர் அலிகான் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் எனக் கூறினார்.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…