நாடாளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வேட்பாளர் சகோதரர் ச.முரசொலி அவர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு ஒரத்தநாடு பகுதியில் நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். கலைஞரின் மூத்தப்பிள்ளையாம் ‘முரசொலி’-யையும் அண்ணா கண்ட உதயசூரியன் சின்னத்தையும் என்றும் பிரிக்க முடியாது என்பதற்கேற்ப, நம்முடைய வேட்பாளர் முரசொலி அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என்று உரையாற்றினோம். வேளாண் விரோத பாசிச பாஜகவையும், அவர்களின் எடுபிடி அதிமுகவையும் தேர்தல் களத்தில் வீழ்த்திடுவோம். என இவ்வாறு பேசினார்.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…