நாடாளுமன்ற தேர்தலையொட்டி பெரம்பலூர் தொகுதியிலுள்ள துறையூரில் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டம் துறையூரில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப, பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் தம்பி @ArunNehru_DMK வை ஆதரித்து துறையூரில் இன்று வாக்கு சேகரித்தோம். ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்க உதயசூரியனுக்கு வாக்களிக்குமாறு ஆயிரக்கணக்கில் கூடியிருந்த துறையூர் மக்களிடம் கேட்டுக்கொண்டோம். பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்! எனக் குறிப்பிட்டுள்ளார்.