நாமக்கல்லில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, கழக வெற்றி வேட்பாளர் திரு. S தமிழ்மணி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். நாமக்கல் தொகுதிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, சட்டக்கல்லூரி என பல்வேறு திட்டங்களை அளித்து ஒருங்கிணைந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்திய இயக்கம் @AIADMKOfficial இரட்டை வேடம் போடுகின்ற ஒரே கட்சி திமுக! நீட் தேர்வை கொண்டு வந்ததும், இப்போது ரத்து செய்வோம் என்று மக்களை ஏமாற்றுவதும் திமுகவே!
உண்மையில் மத்திய அரசைக் கண்டு பயப்படுவது திமுக தான். ஓடோடி போய் இரவில் சந்தித்து செஸ் போட்டிக்கும் கேலோ இந்தியா விழாவிற்கும் அழைக்கிறார் திரு. @Udhaystalin அவர்கள். சரணாகதி அடைந்து, திரு. மோடி அவர்களை வற்புறுத்தி சென்னைக்கு வரவழைத்து திட்டத்தை துவக்க வைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு தீங்கு இழைக்கக் கூடிய எந்த திட்டம் எப்போது வந்தாலும் அதனை எதிர்த்து போராடி வெல்வோம்!. என இவ்வாறு பேசினார்.