நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (மார்ச் 27) பிற்பகல் 03.00 மணியளவில் நிறைவடைந்தது. பிற்பகல் 03.00 மணி நிலவரப்படி சுமார் 834 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
பானைச் சின்னம் கேட்டு வி.சி.க. வழக்கு!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20- ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (மார்ச் 27) பிற்பகல் 03.00 மணிக்கு நிறைவுப் பெற்றது. பிற்பகல் 03.00 மணி நிலவரப்படி, சுமார் 834 பேர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
“தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள்”- தலைமைத் தேர்தல் அதிகாரி பேட்டி!
டோக்கன் பெற்றவர்கள் மனு தாக்கலுக்கான நேரம் முடிந்த பின்னரும் வேட்பு மனு வழங்க அனுமதிக்கப்படுவர். நாளை (மார்ச் 27) வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது; வேட்பு மனுவைத் திரும்பப் பெற மார்ச் 30- ஆம் தேதி கடைசி நாளாகும். அதன் பிறகு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.