காவல் நிலையத்தில் விசாரணையின் போது ஒருவர் மரணம்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

காவல் நிலையத்தில் விசாரணையின் போது ஒருவர் மரணம்

காவல் நிலையத்தில் விசாரணையின் போது ஒருவர் இறந்து போன சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவை தரக்கோரி உதவி கமிசனரிடம் மனு அளித்துள்ளனர்.

கை கால்களை உடைத்து விட்டு இருக்கலாமே கொன்னுட்டாங்களே என அழுதபடி உறவினர் ஆதங்கம்.

காவல் நிலையத்தில் விசாரணையின் போது ஒருவர் மரணம்

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், பாஜக நிர்வாகியுமான பி.பி.ஜி. டி.சங்கர் கடந்தாண்டு காரில் சென்று கொண்டிருந்தார். நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கச்சிபட்டு பகுதியை சேர்ந்த சாந்தகுமார்(29), ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி வார்டு உறுப்பினராக இருந்து வந்த இவர் உட்பட ஏழு பேரை நசரப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சிறையில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியே வந்த சாந்தகுமார் மற்றும் அவருடன் இருந்தவர்கள் செவ்வாய்பேட்டையில் உள்ள நண்பரின் வீட்டில் தங்கி இருந்தார்.

காவல் நிலையத்தில் விசாரணையின் போது ஒருவர் மரணம்

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சாந்தகுமார் உள்ளிட்ட ஏழு பேர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் சென்ற போலீசார் சாந்தகுமார் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கியதில் சாந்தகுமார் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து போனார்.

இதையடுத்து அவரது உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் தாக்கியதால் தனது கணவர் இறந்து போனதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் இறந்து போன சாந்தகுமார் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல் நிலையத்தில் விசாரணையின் போது ஒருவர் மரணம்

மேலும் சாந்தகுமாரை போலீசார் கைது செய்த இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வழக்கு விசாரணைக்காக பாதுகாத்து தர வேண்டும் என அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் உறவினர்கள் பூந்தமல்லி உதவி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் கூறுகையில், தனது கணவரை வேண்டுமென்றே பணத்தை பெற்று கொண்டு போலீசார் கொலை செய்துவிட்டதாகவும் இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அனைத்து போலீசாரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

https://www.mugavari.in/news/tamilnadu-news/satyapradha-sahu-press-meet/1287

தமிழக அரசு தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் அதுவரை தனது கணவரின் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்து விட்டு சென்றனர். கொலை வழக்கில் சிறையில் இருந்து வந்தவர் போலீஸ் விசாரணையில் இறந்து போன சம்பவத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் பதிவுகளை கேட்டு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அங்கு வந்த இறந்து போன சாந்தகுமாரின் உறவினர் ஒருவர் கை, கால்களை உடைத்து விட்டு இருக்கலாமே உயிரை எடுத்து விட்டார்களே என சோகமாக அழுதபடி பேசியது சோகத்தை ஏற்படுத்தியது.

Video thumbnail
தமிழக பாஜகவின் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் #BJP #AmitShah #nainarnagendran #mugavarinews
00:57
Video thumbnail
திமுக கட்சி பதவியில் இருந்து பொன்முடி நீக்கம் - ஸ்டாலின் அதிரடி #mkstalin #ponmudi #mugavarinews
00:52
Video thumbnail
ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பாடு சட்டவிரோதம் - உச்சநீதிமன்றம் #Governor #RNRavi #SupremeCourt
00:54
Video thumbnail
ஆளுநர் எதற்கு தேவை #tngovernorrnravi #governor #rnravi #mugavarinews
01:00
Video thumbnail
நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு விலக்கு கிடைக்குமா #Neet #TNGovt #BanNeet
00:56
Video thumbnail
திமுக கட்சி பதவியில் இருந்து பொன்முடி நீக்கம் | அண்ணாமலை நீக்கம் | நயினார் நாகேந்திரன் புதிய தலைவர்
08:21
Video thumbnail
ஆளுநர் எதற்கு தேவை | TN Governor | RN Ravi | Mugavari News
10:03
Video thumbnail
ஈ.வெ.ராமசாமி என்கிற நான்... | Thanthai Periyar | Mugavari News
05:32
Video thumbnail
தமிழ்த்தாய் வாழ்த்து | ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி #mkstalin #dmk #rnravi #governor
00:39
Video thumbnail
சனாதனம் என்பது டெங்கு கொசுவைப் போன்றது - உதயநிதி ஸ்டாலின் #UdhayanidhiStalin #SanatanaDharma
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img