தமிழ்நாடு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு!

 

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி த்ரில் வெற்றி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி மாத பௌர்ணமியையொட்டி, கூட்டம் அதிகளவு காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் ஆறு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தண்ணீர், மோர் உள்ளிட்டவை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்டது.

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் பக்தர்கள் காவடி தூக்கி நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தொடர்ந்து கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள தர்மசாஸ்தா கோயிலில் பங்குனி தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கோவையில் தண்ணீர் தட்டுப்பாடு- சில கல்லூரிகளுக்கு விடுமுறை!

இதேபோல், ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தியும், தீ மிதித்தும் நேர்த்திக் கடன்களை செலுத்தினர். வேதாரண்யத்தில் உள்ள சாமூண்டீஸ்வரி ஆலயம் மற்றும் சிதம்பரம் அருகே கீழப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ராணிப்பேட்டை கலவை அருகே உள்ள சோமநாதேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

santhosh

Recent Posts

test breaking news 2

test breaking news

ஜனவரி 10, 2025 1:31 காலை

test breaking news

test breaking news

ஜனவரி 9, 2025 1:18 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி

அமரன் படத்தில் இடம் பெற்ற மொபைல் எண்னிற்கு 1 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ்

அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…

நவம்பர் 21, 2024 2:53 மணி

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது – தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…

நவம்பர் 20, 2024 2:28 மணி