பானைச் சின்னம் வழங்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வி.சி.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
“தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள்”- தலைமைத் தேர்தல் அதிகாரி பேட்டி!
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் ரவிக்குமாரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தொல்.திருமாவளவனும் போட்டியிடுகின்றன.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (மார்ச் 27) பிற்பகல் 03.00 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி, அக்கட்சியின் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு!
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற வி.சி.க.வின் கோரிக்கையை ஏற்ற டெல்லி உயர்நீதிமன்றம், இந்த வழக்கு இன்று (மார்ச் 27) பிற்பகல் 03.00 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.