தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை விற்பனை செய்வதற்கு முன்னதாக, பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசியை எப்படி விநியோகம் செய்கிறீர்கள் என மத்திய அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு தலசீமியா, அனீமியாவால் பாதித்தவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், அது குறித்த விளம்பரங்கள் ரேஷன் கடைகளில் வைத்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. அப்போது அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்டறிவீர்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதுவும் ரேஷன் கடை என்றாலே ஏழை மக்கள் அதிகம் அரிசி வாங்கி பயன்படுத்துவது வழக்கம், அதனால் யார் இந்த அரிசியை பயன்படுத்தலாம், பயன்படுத்தக்கூடாது என்பதில் அரசு கவனமாக செயல்பட வேண்டும் என அறிவுறித்திய நீதிமன்றத்திற்கு தேமுதிக சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே தரம்பிரித்து இந்த அரிசியை யார் உண்ண வேண்டும் என உரிய முறையில் விழிப்புணர்வு செய்து, தெளிவுபடுத்திய பிறகு தான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசி கொண்டுவர வேண்டும். அதுவரை பொது விநியோகத்திற்கு தமிழக அரசு இந்த அரிசியை அனுமதி செய்யக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…