நெல்லை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த நிர்வாகி ராமசுப்பு அறிவித்துள்ளார்.
ஹைதராபாத் மைதானத்தில் சிக்ஸர்கள் பறந்த ஐ.பி.எல். போட்டி!
நெல்லை மக்களவைத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சித் தலைமை போட்டியிட வாய்ப்பு வழங்காததால், அக்கட்சியின் மூத்த நிர்வாகி ராமசுப்பு, சுயேச்சையாகப் போட்டியிட (மார்ச் 27) நேற்று வேட்பு மனுவை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்திருந்தார்.
‘ஜூலை 13- ல் குரூப் 1 தேர்வு நடைபெறும்’ என அறிவிப்பு!
இந்த சூழலில் இன்று (மார்ச் 28) காலை 11.00 மணிக்கு நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் நிர்வாகி ராமசுப்பு, “ஆதங்கத்தை வெளிப்படுத்தவே நேற்று (மார்ச் 27) வேட்பு மனுத்தாக்கல் செய்தேன். நெல்லை மக்களவைத் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவை வாபஸ் பெற முடிவுச் செய்துள்ளேன். மனுவை வாபஸ் பெறுவதற்காக எனது ஆதரவாளர்கள் சென்றுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக செயல்பட மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.