ஆவடி அருகே துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை
ஆவடி அருகே நகை கடை உரிமையாளரை, அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் துப்பாக்கி காட்டி மிரட்டி நகையை கொள்ளை அடித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ், 33. இவர், கடந்த நான்கு ஆண்டுகளாக, வீட்டின் கீழ் தளத்தில் ‘கிருஷ்ணா ஜூவல்லர்ஸ்’ என்ற பெயரில் நகை கடை மற்றும் ‘ரேகா பான் புரோக்கர்’ என்ற பெயரில் அடகு கடையும் நடத்தி வருகிறார்.
இன்று (15.04.2024) பகல் 12:00 மணி அளவில், பிரகாஷ் கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது, ‘மாருதி ஸ்விப்ட்’ காரில், இரண்டு கை துப்பாக்கியுடன் வந்த 5 மர்ம நபர்கள், உள்ளே புகுந்து கடையின் ஷட்டர் அடைத்தனர்.
தொடர்ந்து, ‘சிசிடிவி’ இணைப்பை துண்டித்து, பிரகாஷை தாக்கி, அவரது கையை கட்டி போட்டு, துப்பாக்கி முனையில், 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரூ. 5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து, தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், பிரகாஷின் உறவினர் ஒருவர் கடைக்கு வந்த போது, கடை மூடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சந்தேகத்தின் படி, உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் பிரகாஷை கட்டி போட்டு, கொள்ளையடித்தது தெரிந்தது.
இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த புகாரின் படி ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்டமாக, ஆவடி போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், நான்கு தனிப்படைகள் அமைத்து, மர்ம நபர்கள் வந்த கார் பதிவெண் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://www.mugavari.in/news/tamilnadu-news/udhayanidhi-election-campaign-2/1079
மேலும் சிசிடிவி மூலம் கொள்ளையர்களின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. சென்னை புறநகர் மற்றும் டோல்கேட் பகுதிகளில் புகைப்படத்தை வைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முத்தாபுதுப்பேட்டை வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அனைவரும் புதிய புதிய முகமாகவே இருக்கும். பார்த்து பழகிய முகம் இருக்காது. அதனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடத் தொடங்கியுள்ளனர்.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…