பா.ஜ.க. பெண் நிர்வாகியின் சேலை சிக்கியதை எடுக்க உதவியபோது, எடுக்கப்பட்ட வீடியோவை தி.மு.க.வினர் தவறாகப் பரப்பிவிட்டதாக திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.பாலகணபதி தெரிவித்துள்ளார்.
“2 தொகுதிகளில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம்”- உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!
கடந்த 2022- ஆம் ஆண்டு சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ குறித்து அவர் அளித்த விளக்கத்தை விரிவாகப் பார்ப்போம். பா.ஜ.க. வேட்பாளர் பொன்.பாலகணபதி கூறியதாவது, “பா.ஜ.க. பெண் நிர்வாகியின் சேலை தவறுதலாக காலனியில் சிக்கிக் கொண்டது. சேலையை எடுக்க உதவிய வீடியோவை தி.மு.க.வினர் தவறாகப் பரப்பிவிட்டனர்” என்றார்.
“தமிழகத்தில் பிரச்சனையின்றித் தேர்தலை நடத்த முடிகிறது”- தலைமைத் தேர்தல் அதிகாரி பேச்சு!
இந்த சர்ச்சைக்குரிய வகையிலான வீடியோ தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் வேகமாகப் பரவி வருகிறது.