தேர்தல் நடத்தும் அலுவலர் முன் அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சத்யம் திரையரங்கில் ‘யோதா’ திரைப்படத்தை பார்த்த தோனி!
வடசென்னை மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் கலாநிதி வீராசாமி, அ.தி.மு.க. சார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், இன்று (மார்ச் 25) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் வந்தனர்.
முதலில் தங்கள் மனுவைப் பெற வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் சேகர்பாபு ஆகிய இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, வேட்பு மனுவை முதலில் தாக்கல் செய்ய வந்தது அ.தி.மு.க.வினர் தான் எனக் கூறயும், அதனை ஏற்க சேகர்பாபு மறுத்துள்ளார்.
இதனால் யாருடைய வேட்பு மனுவை முதலில் பெறுவது என செய்வதறியாமல் தேர்தல் அதிகாரி தவித்தார். இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி த்ரில் வெற்றி!
இதனிடையே, வடசென்னையில் தி.மு.க.- அ.தி.மு.க. வாக்குவாதத்தால் தங்களுக்கு தாமதம் ஏற்படுவதாக பா.ஜ.க.வினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.