முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ எச்.எம்.ராஜீ மறைவு – செல்வப்பெருந்தகை இரங்கல்!

நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்ற தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ எச்.எம்.ஏ ராஜீ மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உதகை சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் திரு எச். எம். ராஜு அவர்கள் நேற்று மாலை உடல் நலக்குறைவால் தனது 92 வது வயதில் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். அவர் 1989, 1991 மற்றும் 2001 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று தமிழக சட்டப் பேரவையில் உதக மண்டலம் தொகுதி மக்களுக்காக தன்னுடைய தன்னலமற்ற பங்களிப்பை ஆற்றியவர். சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவராகவும் திறமையாகவும், நியாயமாகவும் செயல்பட்டவர்.

முன்னாள் பாரத பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களின் அன்பை இன்றளவும் வென்றெடுத்த திரு ஆர். பிரபு அவர்களால் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக 1989 இல் அறிமுகமான திரு எச். எம். ராஜு அவர்கள் சிரித்த முகத்தோடும், எளிமையாகவும், பண்போடும் அனைத்து தரப்பு மக்களிடையே பழகி, அனைவரின் குறைகளை அறிந்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட அப்பழுக்கற்ற பெருமகனார். அவரது மறைவு நீலகிரி மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி, தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

 

திரு எச். எம். ராஜு அவர்கள் உதகை சட்டமன்ற தொகுதி மக்களுக்கு ஆற்றிய அளப்பறிய பணிகளும், தன்னலமற்ற சேவைகளும் என்றென்றும் அனைத்து தரப்பு மக்களின் மனதில் மட்டுமல்லாமல், அனைத்துக்கட்சி இயக்க நண்பர்கள் மனதிலும் நீங்காமல் இடம்பெற்றிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் எவருக்கும் இருக்காது. அவரது நினைவுகளோடு பயணிக்கும் காங்கிரஸ் பேரியக்க நண்பர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நீலகிரி மாவட்ட அனைத்து கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் எனது ஆழந்த இறுதி அஞ்சலியை செலுத்துவதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற மனதார வேண்டுகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Raj

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி