பிரதமர் மோடிக்கு இனி வருகிற தேர்தல்களில் மக்கள் நிச்சயம் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் – செல்வப்பெருந்தகை!

 

பிரதமர் மோடிக்கு இனி வருகிற தேர்தல்களில் மக்கள் நிச்சயம் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்டம் முடிந்து, இரண்டாம் கட்டத்திற்கான பரப்புரையை இராஜஸ்தானில் பிரதமர் மோடி மேற்கொண்ட போது, ஆதாரமற்ற அவதூறு அடிப்படையில், சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக விஷமத்தனமான கருத்துகளைக் கூறியிருக்கிறார். இதில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறாததை திரித்து, 2006இல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதன் முன்பகுதியையும், பின்பகுதியையும் விட்டுவிட்டு இடையில் சில வார்த்தைகளை மேற்கோள் காட்டி திரிபு வாதங்களைச் செய்திருக்கிறார். இதன் மூலம் அரசமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகள் ஆகியவற்றை பிரதமர் மோடி அப்பட்டமாக மீறியிருக்கிறார். அவரது இந்தப் பரப்புரையின் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்திருக்கிறது.

முதற்கட்ட தேர்தல் எதிர்பார்த்த வெற்றியைத் தராது என்கிற நிலையில், தோல்வி பயத்தின் காரணமாக மிகமிக இழிவான பிரச்சாரத்தை அரசியல் ஆதாயத்திக்காக பிரதமர் மோடி செய்திருக்கிறார். அவரது உரையின் மூலம் பிரதமர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை உறுதிபடுத்தியிக்கிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமூக நீதிக்காக சமூகப் பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, ‘தாய்மார்களிடம், சகோதரிகளிடம் இருக்கும் தங்கத்தைக் கணக்கெடுத்து அதை மற்றவர்களுக்குக் (இஸ்லாமியர்களுக்கு) கொடுப்போம்’ என்று குறிப்பிட்டிருப்பதாக அப்பட்டமான ஒரு பொய்யைக் கூறியிருக்கிறார்.

மேலும், “அதிக குழந்தைகளைப் பெற்றுகொள்பவர்கள் ஊடுறுவல்காரர்கள்” என மறைமுகமாக இஸ்லாமிய சமுதாயத்தினரைக் கொச்சைப் படுத்தியிருக்கிறார். இத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முற்படும் பிரதமர் மோடிக்கு இனிவருகிற தேர்தல்களில் மக்கள் உரிய பாடத்தைப்புகட்டுவார்கள். முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தில் தொடங்கிய ‘மோடி எதிர்ப்பு அலை, நாடு முழுவதும் வீசிக் கொண்டிருப்பதை உணர்ந்ததன் விளைவுதான் மோடியின் இந்த வெறுப்புப்பேச்சு. இதன் மூலம் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிற நவீன கோயபல்ஸ்’க்கு உரிய படிப்பினையை மக்கள் வழங்குவார்கள் என்பது உறுதி எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Raj

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி