நக்கீரன் கோபாலுக்கு எதிராக பேசிய ஓம்கர் பாலாஜி வழக்கை ஒத்தி வைத்தார் – நீதிபதி ஜெகதீஸ் சந்திரா

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நக்கீரன் கோபாலுக்கு எதிராக வெறுப்பு பேச்சு வழக்கில் இந்து மக்கள் கட்சி  தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் மன்னிப்பு கேட்காததால்  எந்த இடைக்கால  உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா வழக்கை ஒத்தி வைத்தார்.

கடந்த மாதம் 27 ம் தேதி கோவையில்  ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலுக்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசியதாக அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கர் பாலாஜி மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு ஓம்கர் பாலாஜி தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக இன்று நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரி மனுதாக்கல் செய்ய ஓம்கர் பாலாஜிக்கு  உத்தரவிட்டிருந்தார்.

ஓம்கர்பாலாஜி வழக்கை ஒத்தி வைத்த - நீதிபதி ஜெகதீஸ் சந்திரா

அதன்படி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு ஓம்கர்பாலாஜி நேரில் ஆஜராகி நீதிமன்ற உத்தரவுப்படி மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்வதாக தெரிவித்தார். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி என்று இல்லாமல் தானாக முன்வந்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கப்பதாகத்தான் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து திருத்திய மனுவை  ஓம்கர் பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யாமல் கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து நீதிபதி, வழக்கை 19ஆம் தேதி ஒத்தி வைத்தார். இது தொடர்பாக அவருக்கு எந்த ஒரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டார்.

காவல் நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் புகார்

Video thumbnail
தமிழ்த்தாய் வாழ்த்து | ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி #mkstalin #dmk #rnravi #governor
00:39
Video thumbnail
சனாதனம் என்பது டெங்கு கொசுவைப் போன்றது - உதயநிதி ஸ்டாலின் #UdhayanidhiStalin #SanatanaDharma
00:35
Video thumbnail
ஆளுநர் ரவி ராஜினாமா செய்வாரா..? #supremecourt #rnravi #governor #bjp #dmk #mugavarinews
00:58
Video thumbnail
உச்சநீதிமன்ற தீர்ப்பு | ஆளுநர் ரவி ராஜினாமா செய்வாரா..? | Governor RN Ravi | Supreme Court | DMK
15:34
Video thumbnail
கல்வியை நம்மிடமிருந்து தொடர்ந்து பறிக்கும் முயற்சி
00:42
Video thumbnail
நமக்கு கல்வி ஏன் அவசியம்?
00:54
Video thumbnail
நீட் தேர்வு மூலம் ஏற்பட்ட பாதிப்பு
00:48
Video thumbnail
2000 வருஷமா கல்வி ஏன் மறுக்கப்பட்டது? நமக்கு கல்வி ஏன் அவசியம்? நீட் தேர்வு மூலம் ஏற்பட்ட பாதிப்பு
13:24
Video thumbnail
இஸ்லாமியர்களின் சொத்துக்களை பறிக்கும் நோக்கத்தில் ஒன்றிய அரசு
00:38
Video thumbnail
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்தியாவாக மாறிக் கொண்டிருக்கிறது
00:57
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img