தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட சுமார் 1,403 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
ம.தி.மு.க.வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த உயர்நீதிமன்றம்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 30- ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கி நிலையில், இன்று (மார்ச் 27) பிற்பகல் 03.00 மணியளவில் நிறைந்தவடைந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் சுமார் 1,403 பேரிடமிருந்து 1,749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (மார்ச் 28) நடைபெறவுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறவுள்ளது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் மார்ச் 30- ஆம் தேதி கடைசி நாளாகும். அதைத் தொடர்ந்து, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ம.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு!
அதன் தொடர்ச்சியாக, வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.