தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது. தற்போது வரை 730 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
“ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது”- தேர்தல் ஆணையம் பதில்!
18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19- ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடந்த மார்ச் 20- ஆம் தேதி தொடங்கியது.
இதையடுத்து, வேட்பாளர்களை இறுதிச் செய்து வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டினர். ஒருவாரமாக வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், 737 பேர் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக வேலூர் மக்களவைத் தொகுதியில் 31 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்தியாவில் 22.5 லட்சம் யூடியூப் வீடியோக்கள் நீக்கம்!
இந்த நிலையில், இன்றுடன் (மார்ச் 27) வேட்பு மனுத்தாக்கல் நிறைவடையவுள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளனர்.
வேட்பு மனுக்கள் நாளை (மார்ச் 28) பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் மார்ச் 30- ஆம் தேதி கடைசி நாளாகும்.